விராட், ரோஹித்துக்கு 2027 உ.கோ கேரண்டி கிடையாது.. அது நல்லா அமைஞ்சா பாக்கலாம்.. கம்பீர் பேட்டி

Gautam Gambhir 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய கோப்பைகளை அவர் இந்தியாவின் கேப்டனாக வென்றுள்ளார்.

அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இந்திய அணியை தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியது. அதன் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

கேரண்டி கிடையாது:

இருப்பினும் 2027 உலகக் கோப்பை நடைபெறும் தென்னாப்பிரிக்க மண்ணில் இளம் அணியால் மட்டும் சாதிக்க முடியாது என்ற கருத்து காணப்படுகிறது. எனவே உலகக் கோப்பையை இந்தியா வெல்ல விராட், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் விளையாடுவது அவசியம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகக் கோப்பைக்கு இரண்டரை வருடம் இருப்பதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன் அனைத்தும் மாறும் என்பதால் விராட், ரோஹித் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி கிடையாது என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். தற்போதைய நிலையில் அவர்கள் ஆஸ்திரேலியா தொடரில் வெற்றிகரமாக செயல்படுகிறார்களா? என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கம்பீர் சூசகமாக பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கம்பீர் சூசகம்:

“2027 உலகக் கோப்பை 2.5 வருடங்கள் தொலைவில் இருக்கிறது. எனவே நாம் நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தரமான வீரர்கள். தற்போதைய நிலையில் அவர்களுக்கு ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகரமாக அமையும் என்று நம்பலாம்” எனக் கூறினார். இதற்கிடையே ஆஸ்திரேலியா, தொடருடன் விராட், ரோஹித் மொத்தமாக கழற்றி விடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: அபிஷேக் இருக்கட்டும்.. ரோஹித்தை மிஸ் பண்ண விடாத அவருக்கு ஓப்பனிங்கில் சான்ஸ் கொடுங்க.. ஆகாஷ் சோப்ரா

அதனால் ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்குப்பின் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களைத் தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்தது. அதனால் இங்கிலாந்து தொடருக்கு முன் விராட், ரோஹித் சர்மா தாமகவே அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் மரியாதையுடன் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement