இந்திய நாட்டுக்காக விளையாடும் நீங்க ஒன்னும் சுற்றுலா வரல.. விராட் கோலியின் அதிருப்திக்கு கம்பீர் பதிலடி

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தோல்வியின் எதிரொலியாக இந்திய அணிக்கு 10 புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

அதில் வெளிநாடுகளில் நடைபெறும் பெரிய தொடரின் போது வீரர்கள் தங்களுடைய குடும்பத்துடன் முழுமையாக இருக்க அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நடைபெறும் தொடர்களில் 14 நாட்கள் மட்டுமே வீரர்கள் தங்களுடைய குடும்பத்துடன் இருக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

- Advertisement -

விராட் கோலி அதிருப்தி:

குறிப்பாக அந்தக் குறிப்பிட்ட விதிமுறைக்கு தாம் ரசிகன் கிடையாது என்று விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் குடும்பம் என்பது முக்கியம் தான் என்று பயிற்சியால் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய திருநாட்டுக்காக விளையாடும் போது குடும்பத்தை விட முக்கியமானது எதுவும் கிடையாது என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

எனவே வெளிநாட்டில் விளையாடுவது ஒன்றும் சுற்றுலா கிடையாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் புஜாராவிடம் பேசியது பின்வருமாறு. “குடும்பம் முக்கியமே. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இங்கே நோக்கத்துக்காக வந்துள்ளீர்கள் சுற்றுலாவுக்காக அல்ல”

- Advertisement -

கம்பீர் பதிலடி:

“இந்தச் சுற்றுப்பயணத்தில் நமது நாட்டை பெருமையடைய வைப்பதற்கான வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதற்காக நான் குடும்பங்களுக்கு எதிராக இல்லை. குடும்பங்கள் முக்கியம் என்றாலும் நீங்கள் நாட்டுக்காக விளையாட ஈடுபட்டுள்ளீர்கள். எனவே உங்களுடைய நாட்டை பெருமையடைய வைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட வேறு எதுவும் பெரியது கிடையாது”

இதையும் படிங்க: லார்ட்ஸ் பலகையில் உங்க பெயர் இல்லயே.. கலாய்த்த நிக்கோலஸ்.. 1998 சம்பவத்தை பதிலடியாக கொடுத்த சச்சின்

“என்னைப் பொறுத்த வரை அதுவே மற்ற அனைத்தையும் விட முதன்மையான இலக்காக இருக்க வேண்டும்” எனக் கூறினார். இதற்கிடையே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் கழற்றி விட கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement