சினிமா ஸ்கிரிப்ட் கூட இப்படி அமையாது.. அடுத்ததா இதை செய்வோம் வாங்க.. விராட், ரோஹித்தை வாழ்த்திய கம்பீர்

Gautam Gambhir
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.

அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியவருடைய ஓய்வு பல ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எதிரணிகளை சொல்லி அடித்த அவர்கள் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

- Advertisement -

வாழ்த்திய கம்பீர்:
இருப்பினும் 35 வயதை கடந்து விட்டதால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு விடை பெறுவதாக அந்த 2 ஜாம்பவான்களும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களுடைய கடைசி முயற்சியில் உலகக்கோப்பை வென்று ஓய்வு பெற்ற ரோகித் – விராட் கோலி சினிமா கதையை மிஞ்சியுள்ளதாக கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். அத்துடன் கௌதம் கம்பீர் விரைவில் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் காணப்படுகிறது.

எனவே தமது தலைமையில் 2025 ஒருநாள் சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய ஐசிசி தொடர்களில் அவர்கள் தொடர்ந்து விளையாடி இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் உலகக்கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்றுள்ளனர். அது எழுதப்பட்ட எந்த கதையையும் விட சிறப்பான ஒன்றாகும்”

- Advertisement -

“அந்த இருவருமே மகத்தான வீரர்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய பங்காற்றியுள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் அவர்கள் 2 ஃபார்மட்டில் விளையாட உள்ளனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். எனவே அதில் அவர்கள் தொடர்ந்து நாட்டுக்காகவும் அணிக்காகவும் வெற்றிகளில் பங்காற்றுவார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா தோத்துருந்தா கோலியை விளாசிருப்பாங்க.. ஃபைனல் ஆட்டநாயகன் விருதை அவருக்கு கொடுத்துருக்கலாம்.. மஞ்ரேக்கர் கருத்து

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய ஐசிசி தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவார்கள் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார். அந்த 2 கோப்பைகளையும் வெல்வதே இந்தியாவின் அடுத்த இலக்கு என்றும் அவர் கூறியிருந்தார். அதுவே இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement