- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதான் நம்ம டெம்ப்ளேட்.. வராதவங்களை விட்றலாம்.. முதலில் அந்த மாதிரி வீரர்களை கண்டறியனும்.. கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் களத்தில் அதிரடியாக செயல்படக்கூடிய அவர் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினர். அதே போல 2 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள அவர் 2024 சீசனில் ஆலோசகராக கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதனால் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் வரும் 2027 டிசம்பர் மாதம் வரை இந்திய அணியுடன் சேர்ந்து செயல்பட உள்ளார். இந்த காலகட்டங்களில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. மேலும் 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 உலகக் கோப்பை தொடர்களிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

- Advertisement -

கம்பீர் டெம்ப்ளேட்:
எனவே அந்தத் தொடர்களில் ஏதேனும் ஒரு உலகக் கோப்பையாவது அவர் இந்திய அணிக்கு பெற்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எந்த மாதிரியான வீரர்களுடன் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி 2023 உலகக் கோப்பையின் போது கம்பீர் பேட்டி கொடுத்திருந்தார். ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வெளியான அந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

“ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் நீங்கள் பயமற்ற அணுகுமுறையை கொண்டுள்ள வீரர்களை கண்டறிய வேண்டும். அதே சமயம் உங்களுக்கு நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடக்கூடிய வீரர்களும் கலவையாக வேண்டும். அடிப்படை விதிமுறையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காலங்களில் ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது”

- Advertisement -

“ஆனால் தற்போது 5 புதிய பந்துகளும் உள்வட்டத்திற்குள் 5 வீரர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். எனவே பகுதி நேர பவுலரின் வேலை தற்போது காணாமல் போய்விட்டது. ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க முடியவில்லை. விரல் ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைப்பதில்லை. இருப்பினும் எனது புதிய அணுகு முறையில் அந்த வேலைகளுக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடிய வீரர்களை கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க: இதெல்லாம் யார் சொல்றங்கன்னு தெரியல.. பிசிசிஐ இதைத்தான் செய்யும்.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி பற்றி ராஜிவ் சுக்லா

“சில வீரர்களால் இந்த டெம்ப்ளேட்டுக்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள முடியாது. எனவே இயற்கையாக வராதவர்களை நீங்கள் அதற்குள் தள்ளக் கூடாது. அதனால் குறிப்பிட்ட டெம்ப்ளேட்டில் விளையாடுவதை விட அதிரடியான அணுகுமுறை கொண்ட 15 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறினார். அதாவது அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுவதை விட அப்படி விளையாடும் வீரர்களை கண்டறிந்து அதிரடியான அணியை உருவாக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -