இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குவதால் வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் சச்சின் முதல் விராட் கோலி வரை ஏராளமான ஜாம்பவான்கள் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவால் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற முடியவில்லை.
முன்னதாக புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டு ஓய்வு பெற வைத்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை இளம் இந்திய வீரர்கள் இங்கிலாந்திலும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
யார்ன்னு காட்டுங்க:
இந்த வாய்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களை யார் என்று காட்டுங்கள் என கௌதம் கம்பீர் இந்திய அணியினரிடையே பேசியது பின்வருமாறு. “இந்த சுற்றுப்பயணத்தை 2 விதமாக பார்க்க வேண்டும் என்று மட்டுமே நான் சொல்வேன். ஒன்று நாம் 3 அதிகமான அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் விளையாடுகிறோம் என்று பார்க்கலாம் அல்லது இது மற்றவர்கள் நாட்டுக்காக ஏதாவது ஸ்பெஷலாக சாதிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு என்று பார்க்கலாம்”
“தற்போதைய அணியில் வெற்றிக்கான பசி, ஆர்வம் அர்ப்பணிப்பு ஆகியவை இருப்பதை நான் பார்க்கிறேன். நாம் ஒவ்வொரு நாட்களாக அல்லாமல் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு பந்திலும் போராடினால் நம்மால் இந்த சுற்றுப்பயணத்தை நியாபகம் வைத்துக் கொள்ளக் கூடியதாக மாற்ற முடியும். முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் ஸ்பெஷலானது”
கம்பீர் ஸ்பீச்:
“எனவே கடந்த 3 மாதங்களாக சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சனை நான் வரவேற்கிறேன். உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேரியரையும் வெற்றிகரமாக உருவாக்குங்கள். அர்ஷ்தீப் சிங்கை வரவேற்கிறேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் நீங்கள் உங்களுடைய கைகளை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கணக்கிடுவீர்கள் என்று நம்புகிறேன். கம்பேக் கொடுப்பது எளிது கிடையாது”
இதையும் படிங்க: அந்த நம்பிக்கையுடன் சோதிக்க வரும் இந்தியாவை சாய்த்து சாதிப்போம்.. இங்கிலாந்து கோச் மெக்கல்லம் பேட்டி
“அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் (கருண் நாயர்) கடந்த வருடம் அபாரமாக உள்ளூரில் விளையாடி 7 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ளார். சாகும் வரை போராடாமல் என்பது போன்ற அணுகுமுறை மொத்த அணிக்கும் உத்வேகத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. நம்முடைய தேசத்தின் டெஸ்ட் அணியை வழிநடத்தும் பெரிய கௌரவத்தை பெற்றுள்ள சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தலைமைப் பொறுப்பில் அங்கமாக இருக்கும் ரிஷப் பண்ட்டையும் (துணை கேப்டன்) வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.



