- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வந்தது 3000 விண்ணப்பம்.. ஆனா கம்பீருக்கு மட்டும் அழைப்பு விடுத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தான் மேலும் இந்திய அணியில் தொடர விரும்பவில்லை என ராகுல் டிராவிட் ஏற்கனவே அறிவித்ததால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அடுத்த பயிற்சியாளர் தேடலுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெற உள்ளதாகவும் அந்த தேர்வில் கௌதம் கம்பீர் மட்டுமே கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் பி.சி.சி.ஐ சார்பாக 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில் சில போலி விண்ணப்பங்கள் வந்தாலும் ஒரேடியாக எப்படி கௌதம் கம்பீர் மட்டும் தான் இந்த பதவிக்கு விண்ணப்பித்தார் என்று அவரை நீங்கள் அழைக்கலாம் என்ற கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைத்து உள்ளனர்.

மேலும் ஒரு சில போலி விண்ணப்பங்கள் பிரபலங்களின் பெயரில் வந்தது உண்மைதான் ஆனாலும் கெளதம் கம்பீரை தவிர்த்து வெகு சிலர் நிச்சயமாக அந்த பதவிக்கு விண்ணப்பித்து இருப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் விடுத்து கௌதம் கம்பீரை நேரடியாக பிசிசிஐ கம்பீரை மட்டும் அழைத்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

- Advertisement -

கௌதம் கம்பீருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரது நிபந்தனைகளுக்கு எல்லாம் சம்மதம் தெரிவித்ததால் அவர்தான் பயிற்சியாளர் என்று அறிவிப்பது உறுதியான வேளையில் இன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளது அவரது நியமனத்தை உறுதி செய்துள்ளதாக அமைந்துள்ளது. மேலும் கௌதம் கம்பீர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து விட்டு இன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவை காப்பி அடிச்சா ஜெயிக்க முடியுமா? ஜிம்பாப்வேவிடம் அடிச்சுட்டு கோலியுடன் கம்பேரிசனா? கனேரியா விளாசல்

எது எப்படியோ கெளதம் கம்பீரை நேரடியாக தேர்வு செய்தால் கூட பொதுவாக அறிவித்துவிட்டு அவரது தேர்வை உறுதி செய்திருக்கலாம். ஆனால் விண்ணப்பங்களை பெறுமாறு பெற்று அதன்படி தேர்வு நடக்குமாறு நாடகத்தை அரங்கேற்றியது ஏன் என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -