எந்தவொரு கோச்சும் செய்யாத காரியத்தை செய்ய முன்வந்த கவுதம் கம்பீர்.. அதிரடியான முடிவால் – வியந்து போன பி.சி.சி.ஐ

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரோடு தனது பதிவியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து பிசிசிஐ மூலம் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கொண்டுவரப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் தடுமாறினாலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கோப்பையையும் இந்திய அணி வென்றுள்ளதால் கௌதம் கம்பீர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

கம்பீர் எடுத்துள்ள அதிரடி முடிவு : வியந்து போன பி.சி.சி.ஐ

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருக்கும் 3 ஐசிசி கோப்பைகளை கைப்பற்றுவதே எங்களது இலக்கு என்றும் வெளிப்படையான கருத்தினை அளித்திருந்தார். இதன் காரணமாக இன்னும் சில ஆண்டுகள் கௌதம் கம்பீர் தான் இந்திய அணியை பயிற்சியாளராக வழிநடத்தப்போகிறார் என்பது உறுதியாகியது. தற்போதைய இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தேவையான வீரர்களை இணைப்பது, தேவையற்ற வீரர்களை அணியிலிருந்து நீக்குவது என முக்கிய முடிவுகளை கௌதம் கம்பீர் எடுத்து வருகிறார்.

- Advertisement -

அவரது முடிவுகள் அனைத்தும் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே செய்யப்படுவதால் பிசிசிஐ-யும் அவருக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது. அடுத்ததாக இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வேளையில் அதற்கு முன்னதாக தற்போது இரண்டு மாதங்கள் ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் முடிய இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்பதனால் கம்பீர் ஓய்வு எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஓய்வு நேரத்தினை வேறு வழியில் செலவிட தற்போது கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். அந்த முடிவு தான் பிசிசிஐ-யும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள இவ்வேளையில் அவர் இந்திய ஏ அணியுடன் இங்கிலாந்து பயணித்து அங்கு நடைபெறவுள்ள தொடரில் இந்திய ஏ அணியை பயிற்றுவிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்த ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அங்கு செல்ல இருக்கும் வேளையில் தற்போது முன்கூட்டியே அங்கு சென்று இந்திய ஏ அணியை பயிற்றுவித்து பின்னர் அதே அனுபவத்தை முதன்மை இந்திய அணிக்கும் அவர் கொண்டுவரவே இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : பும்ரா, ரோஹித், கோலி இல்லாமையே இந்தியா ஜெய்க்கும்.. இந்த கம்பேக் தான் காரணம்.. கவாஸ்கர் எச்சரிக்கை

வழக்கமாக இந்திய பயிற்சியாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை குடும்பத்தாருடன் செலவிடும் வேளையில் கம்பீர் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடாமல் இந்திய ஏ அணியை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல எடுத்துள்ள முடிவு அனைவரது மத்தியிலும் பாராட்டினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement