- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் யாதவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதே இவர்தானாம் – வெளியான தகவல்

கடந்த 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய டி20 கேப்டனான ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் காரணமாக புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி டி20 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வந்தது. அதேபோன்று இதுவரை எந்த ஒரு டி20 தொடரிலும் தோல்வியை சந்திக்காமல் 2026 டி20 உலக கோப்பையையும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

சூரியகுமார் யாதவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது இவர்தான் :

இதன் காரணமாக அடுத்து 2028 டி20 உலகக்கோப்பை தொடர் வரை சூரியகுமார் இந்திய டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே வேளையில் சூரியகுமார் யாதவும் 2028 டி20 உலக கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கேப்டனாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக தனது விருப்பதை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

ஆனால் அண்மையில் அறிவிக்கப்பட்ட அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டதோடு சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் இருந்தே கழட்டிவிடப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளின் போது அவர் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தியதே காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் சூரியகுமார் யாதவை இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்க காரணமே கெளதம் கம்பீர் வைத்த பரிந்துரை தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சூரியகுமார் யாதவின் பார்மை கண்ட கௌதம் கம்பீர் அவரை டி20 கேப்டன் பதிவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் இடத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடப்போவது யார்? – 2 பேருக்கு இடையே போட்டி

ஆனால் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் ஷ்ரேயாஸ் ஐயரின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகளில் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்திருப்பதால் அவரை டி20 அணியின் கேப்டனாக நியமித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -