சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ஜூலை 27-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு பதவி விலகுவதாக அறிவித்ததால் தற்போது புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைந்து தனது முதல் தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
அந்த வகையில் இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு முதல் நாள் பயிற்சி அளித்த கம்பீர் வீரர்களுக்கு தனித்தனியே சென்று ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கியிருந்தார். அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் மீது தனி கவனம் செலுத்தி அவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி உள்ளார்.
அதாவது மிகச் சிறப்பான திறமை இருந்தும் தொடர் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் என்னென்ன தவறுகளை செய்கிறார் என்பதை உற்றுநோக்கியுள்ள கம்பீர் அவரது பேட்டிங்கில் தவறுகளை சரி செய்யும் விதமாக அவரிடம் தனியாக பயிற்சி வழங்கினார்.
மிகச் சிறப்பான வீரராக இருந்தாலும் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு தேவையில்லாத ஷாட்களை விளையாடி ஆட்டமிழக்கும் சாம்சன் எப்படிப்பட்ட பந்துகளை அடிக்க வேண்டும் எப்படி பந்துகளை விட வேண்டும் என்பது குறித்தும் போட்டியின் எந்த நேரத்திலும் எவ்வாறு விளையாட வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகளை சாம்சனுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு தலை வலியா மாறப்போறதே இந்த விடயம் தான் – ராபின் உத்தப்பா கருத்து
மேலும் ஏற்கனவே சஞ்சு சாம்சன் மீது நல்ல அபிப்ராயம் வைத்துள்ள கம்பீர் நிச்சயம் அவருக்கு டி20 அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்குவார் என்பதனாலே அவரது பேட்டிங் பயிற்சி மீது தனி கவனம் செலுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.



