
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வரும் இந்திய அணியானது டெஸ்ட் தொடரை அந்த அணியிடம் இழந்திருந்தாலும் ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது. அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த டி20 தொடரானது எதிர்வரும் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் நடைபெறயிருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில்லின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஆனால் முழு உடற்தகுதி பெற்றால் மட்டுமே இந்த டி20 தொடரில் விளையாடுவார் என்பதனால் இறுதி நேரத்திலேயே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த சுப்மன் கில் அதன்பின்னர் ஒருநாள் தொடரை முற்றிலுமாக தவறவிட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதிக்கான சோதனையை அவர் உறுதி செய்தால் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் ஒருநாள் தொடர் முடிந்த கையோடு சுப்மன் கில் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றினை வழங்கியுள்ளார். அப்படி அவர் கூறியதாவது : சுப்மன் கில் தற்போது முழு உடற்தகுதியை எட்டிவிட்டார். அதன் காரணமாகவே அவர் டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரை தாண்டி 2 அடி முன்னே சென்ற கிங் விராட் கோலி – விவரம் இதோ
கடந்த சில போட்டிகளாகவே அவர் விளையாடதால் மீண்டும் ரன் குவிக்க வேண்டும் என்ற பசியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டியின் மூலம் சுப்மன் கில் நிச்சயம் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் அபிஷேக் சர்மாவுடன் அவர் துவக்க வீரராக விளையாடும் பட்சத்தில் மீண்டும் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு செல்வார் என்று தெரிகிறது.