2008இல் பாத்த விராட் கோலியிடம் இன்னும் இது மாறல.. கண்டிப்பா அங்க ரன்ஸ் அடிப்பாரு.. கம்பீர் ஆதரவு

Gautam Gambhir
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்க உள்ளது.

அந்தத் தொடரிலாவது விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2021 ஜனவரி மாதம் ஸ்மித், ரூட், வில்லியம்சன் ஆகியோரை விட அதிக ரன்கள் மற்றும் சதங்கள் எடுத்து விராட் கோலி முன்னிலையில் இருந்தார். ஆனால் கடந்த 3 வருடங்களில் சுமாராக விளையாடிய அவர் தற்போது அந்த மூவரை விட பின்தங்கியுள்ளார்.

- Advertisement -

தடுமாறும் விராட் கோலி:

இந்நிலையில் 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான முதல் போட்டியில் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற பசி விராட் கோலியிடம் இருந்ததாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதே பசி இன்றும் அவரிடம் இருப்பதைப் பார்ப்பதாக கம்பீர் கூறியுள்ளார். எனவே நியூசிலாந்து மற்றும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் தொடர்களில் விராட் கோலி ரன்கள் குவிப்பார் என்று கம்பீர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பற்றிய என்னுடைய எண்ணங்கள் எப்போதும் தெளிவானது. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நீண்ட காலமாக அசத்தியவர். அறிமுகப் போட்டியில் கொண்டிருந்த அதே பசியை இப்போதும் அவர் கொண்டுள்ளார். இலங்கையில் அறிமுகமான போது அவருடன் நான் ஓப்பனிங்கில் களமிறங்கியது இன்னும் நினைவிருக்கிறது”

- Advertisement -

கம்பீர் ஆதரவு:

“இப்போதும் அதே பசியை கொண்டுள்ளதே அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாக்கியுள்ளது. எனவே இந்த தொடரிலும் அடுத்து முன்னோக்கி வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் ரன்கள் குவிப்பதற்காக பசியுடன் இருப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். ஒரு முறை ரன்கள் குவிக்க துவங்கி விட்டால் அவர் தொடர்ச்சியாக அசத்துவார்”

இதையும் படிங்க: ஓஹோ மும்பைக்கு ஜால்ராவா? இந்திய மகளிரணி பற்றிய சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்தை விளாசும் ரசிகர்கள்

“எனவே இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தொடரிலும் அவருடைய ஆட்டத்தை நீங்கள் முன்னோக்கியிருக்கலாம்” என்று கூறினார். அத்துடன் வீரர்களை ஒவ்வொரு போட்டி அல்லது ஒரு தொடர் முடிந்த பின் மதிப்பிடுவது நியாயமற்றது என்றும் கம்பீர் கூறியுள்ளார். எனவே திறமையான வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுப்பதே தம்முடைய வேலை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement