கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி இனி தயாராக இருக்கவேண்டும். கங்குலி கொடுக்கவுள்ள புது அசைன்மென்ட்

ganguly
- Advertisement -

சென்ற மாதம் பி.சி.சி.ஐ – யின் புதிய தலைவராக கங்குலி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கடுத்து சில அதிரடி நடவடிக்கைகளை செய்து வந்த கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தைக் கொண்டுவர பகலிரவு போட்டியை கொல்கத்தாவில் நடத்தி அனைத்து தரப்பினரின் வரவேற்பினைப் பெற்றார்.

Cup

இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதன் மூலம் ரசிகர்கள் தங்களது வேலைகளை முடித்து மாலை நேரத்தில் போட்டியை காண மைதானத்திற்கு நேராக வருவார்கள் என்பதால் இந்த போட்டியை நடத்துவது அவசியம் என்று அறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார். அதுபோன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் கூட்டம் அள்ளியது.

- Advertisement -

அதனை அடுத்து தற்போது இந்திய அணி வெளிநாடுகளுக்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போதும் சரி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போதும் சரி இனி ஒரு தொடருக்கு ஒரு பகலிரவு போட்டியை இந்திய அணி விளையாட வைக்கப்போவதாக கங்குலி முடிவு செய்துள்ளாராம்.

ஏனெனில் வெளிநாட்டு தொடர்களில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி மறுத்து வந்தது. இனி வெளிநாடுகளிலும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும். ஏனெனில் சில ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது நல்லது கிடையாது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தில் டெஸ்ட் போட்டி விளையாடினால் டெஸ்ட் போட்டிக்கான ருசிகரம் அதிகமாகும்.

Rohith

மேலும் டெஸ்ட் போட்டிகளிள் அழியாமல் காப்பதற்கான வழியாக பகலிரவு டெஸ்ட் போட்டி பார்க்கப்படுவதால் அனைத்து போட்டிகளையும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக விளையாட தேவையில்லை ஒரு தொடருக்கு ஒரு போட்டியாவது பகலிரவு ஆட்டமாக நடைபெற கங்குலி விரும்புவதாக தெரிகிறது. மேலும் இதற்காக இந்திய அணி மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் தயாராக இருக்க வேண்டும் என்றும் இனி இந்த அதிரடி தொடரும் என்றும் கங்குலி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement