சத்தியமா இதுமாதிரி ஒரு டீமை நான் பாத்ததே இல்ல.. பாகிஸ்தான் அணியை விமர்சித்த – பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன்

Gary
- Advertisement -

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என்கிற அளவிற்கு பேச்சுக்கள் வலுத்து வருகின்றன.

அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா அணியிடம் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை சந்தித்த பாகிஸ்தான அணி இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான அணியில் ஒற்றுமை இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் கட்டமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை என்பது சற்றும் இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு அணி கிடையாது. எந்த ஒரு வீரரும் மற்றொரு வீரரை ஆதரிக்க மறுக்கிறார்கள். அந்த அணியில் இரண்டு பிரிவு இருக்கிறது.

- Advertisement -

நான் பல அணிகளுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு சூழலை எந்த அணியிடமும் நான் பார்த்தது கிடையாது. நாம் உலகில் மற்ற பலமான அணிகளை எதிர்க்கும் போது உடற்தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பாகிஸ்தான் அணியில் உடற்பகுதி என்பது மிக மிக பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க : ஸ்டீவ் ஸ்மித் போன்ற வேலையை செய்த வங்கதேச வீரர்கள்.. விவரம் தெரியாமல் ஏமாந்த நேபாள்?

அதோடு வீரர்களிடம் கொஞ்சமும் ஒற்றுமை இல்லை. வெற்றிக்காக ஒரு அணியாக செயல்பட வேண்டும் எனப்தையும் மறந்துவிட்டனர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளாரான அவரே முன் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement