என்னை அனுமதிக்காததால் மொத்த அணியையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்ற தோனி – கேரி கிர்ஸ்டன் பகிர்ந்த சம்பவம்

Kirsten 3
- Advertisement -

இந்திய அணிக்கு தோனி 2007 ஆம் ஆண்டு கேப்டனாக அறிமுகமானார், அறிமுகம் ஆன புதிதிலேயே டி20 உலக கோப்பை தொடரை வென்று தன்னை உடனடியாக நிரூபித்தார் . அதன் பின்னர் எல்லாம் நடந்தது சம்பவங்கள் மட்டுமே. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றது என பல சாதனைகளை படைத்தார் தோனி.

Dhoni

- Advertisement -

கேப்டனாக பதவி ஏற்றவுடன் 5 மாதத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இந்தியாவிற்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சியாளராக இருக்கும் போதுதான் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரை வென்றது. கோப்பை வென்ற பின்னர் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தலையில் தூக்கி வைத்து மைதானத்தை சுற்றி இதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

இந்நிலையில் தற்போது கேரி கிறிஸ்டன் தோனி பற்றி ஒரு சுவாரசியமான விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். அணி வீரர்கள் எப்போதும் அவர் உறுதுணையாக இருப்பார் என்று பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

Kirsten

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள விமானப்படை தளத்தை பார்க்க சென்றிருந்தோம். அது இந்தியாவிற்கு சொந்தமானது. இதன் காரணமாக வெளிநாட்டினருக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு சென்று பார்க்க ஆசைப் பட்டனர்.

Kirsten 2

அனைவரும் செல்லும்போது அணியில் இருந்த நான், பேடி அப்டன், எரிக் சிமொன்ஸ் ஆகியோரை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக உடனடியாக வெகுண்டு எழுந்த தோனி அவர்களின் இந்திய நாட்டினர் இல்லை என்றாலும், என் அணியைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு இங்கு இடம் இல்லை என்றால் நானும் வரப்போவதில்லை .வீரர்களும் அங்கு வரப்போவதில்லை என்று கூறி உடனடியாக அந்த இடத்தை புறக்கணித்தார் தோனி என்று கூறியுள்ளார்.

Advertisement