யாரிடமும் அது சுத்தமா இல்லை.. பாகிஸ்தான் மாதிரி அணியை பாத்ததே இல்ல.. கேரி கிர்ஸ்டன் அதிருப்தி

Gary Kirsten 2
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியது. ஏனெனில் முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2வது போட்டியில் இந்தியாவிடம் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்றது. அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றும் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்த தோல்விக்கு கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல முகமது ரிஸ்வான், சாஹின் அப்ரிடி போன்ற மற்ற வீரர்களும் அசத்தாதது தோல்வியை கொடுத்தது. முன்னதாக இந்தியா 2011 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் கேரி கிர்ஸ்டன் இத்தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

டீம்ன்னு சொல்லாதீங்க:
ஆனால் அவருடைய தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வீட்டுக்கு கிளம்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் வீரர்களிடம் யாருமே ஒற்றுயுடன் இல்லை என்று கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். அதனால் இதற்கு முன் இந்தியா போன்ற அணிகளில் வேலை செய்த தாம் தாம் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் இணையத்தில் வெளியாகியுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. பொதுவாக நீங்கள் உங்களை ஒரு அணி என்று சொல்வீர்கள். ஆனால் அது ஒரு அணியல்ல. ஏனெனில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்துள்ளனர். நான் பல அணிகளுடன் வேலை செய்துள்ளேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை”

- Advertisement -

“எந்த சூழ்நிலைக்கு எந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே இனிமேல் அந்த இடங்களில் முன்னேறுபவர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் நீக்கப்படுவார்கள்” என்று கூறினார். முன்னதாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விகளுக்காக பொறுப்பேற்று பாபர் அசாம் பாகிஸ்தானின் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக விராட் கோலி 5 ரன்ஸ் எடுத்தாரு தான்.. ஆனா நீங்கள் செஞ்சது என்ன? பாபருக்கு சேஷாத் கேள்வி

அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட சாகின் அப்ரிடி தலைமையில் 4 – 1 (5) என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் உடனடியாக அவரை நீக்கிய பாகிஸ்தான் வாரியம் பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக அறிவித்தது. அத்துடன் துணை கேப்டன்ஷிப் பொறுப்பை ஷாஹீன் அப்ரிடியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை சாகிர் அப்ரிடி ஏற்க மறுத்து விட்டார். அப்போதிலிருந்தே பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையின்மையும் பிரிவினையும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement