தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் டெஸ்ட் போட்டிக்கு சரியான கீப்பர் – கங்குலி பேட்டி

Ganguly-1

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று (22 ஆம் தேதி) இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.

pant 5

முதல் டெஸ்ட் போட்டியான இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான பண்ட் குறித்து கங்குலி கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

டெஸ்ட் போட்டிகளில் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தோனிக்கு அடுத்து இந்திய அணியில் நீண்ட நாட்கள் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் தகுதி பண்ட்டுக்கு உள்ளது.

pant six

அவரது அதிரடி பாணி சிறப்பான ஒன்றாகும். கீப்பிங் டெக்னிக்கில் சில மாற்றங்களை செய்தால் பண்ட் தோனிக்கு அடுத்து இந்திய அணியின் சிறந்த கீப்பராக மாற அனைத்து தகுதிகளும் அவரிடம் உண்டு என கங்குலி பண்ட் குறித்து கூறினார்.