பிசிசிஐயின் தலைவராக கங்குலியால் ஓராண்டு மட்டும் தான் இருக்க முடியும். காரணம் இதுதான் – விவரம் இதோ

- Advertisement -

சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வரும் 23 தேதி முதல் தனித்து செயல்பட உள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐயின் புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பொறுப்பிற்கு கங்குலியின் பெயர் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Ganguly

மேலும் கங்குலி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் உள்ளதால் பிசிசிஐ தலைவராக அவர் பொறுப்பை ஏற்றாலும் 9 மாதங்களே அதாவது ஜூலை 2020 ஆம் ஆண்டு வரை மட்டுமே பிசிசிஐ தலைவராக இருக்க முடியும்.

- Advertisement -

ஏனென்றால் பிசிசிஐயின் விதிகளின்படி ஒரு நபர் தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் வரை மட்டுமே கிரிக்கெட் நிர்வாக பதவி வகிக்க முடியும். அதன்படி கங்குலி கடந்த 5 ஆண்டுகளாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக பணியாற்றி வருவதால் பிசிசிஐயின் தலைவராக அவர் ஒரு ஆண்டு மட்டுமே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ganguly-bcci 2

இந்நிலையில் நான் பொறுப்பேற்ற பிறகு முதலில் செய்ய இருப்பது முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்குவேன். இதுகுறித்து பலமுறை நான் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளேன் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நான் பொறுப்பேற்ற பின் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முக்கியத்துவம் கொடுப்பேன் மேலும் முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்னுரிமை வழங்குவேன் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement