கங்குலி இங்கிலாந்து பயணம். இந்த மீட்டிங் சக்ஸஸ் ஆச்சுன்னா மொத்த கண்ட்ரோலும் நம்ம தாதா கைக்கு வந்துடும்

Ganguly
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சில மாதங்களுக்கு முன்னர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வானார். அப்படி அவர் தலைவர் ஆனதில் இருந்தே பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக கொல்கத்தாவில் நடந்த இந்திய – பங்களாதேஷ் பகலிரவு டெஸ்ட் போட்டி அவரின் ஆளுமையை உச்சத்திற்கு கொண்டு சென்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நான்கு நாடுகள் கலந்து கொண்டு விளையாடும் சூப்பர் சீரிஸ் தொடர் ஒன்றினை நடத்த மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த சூப்பர் சீரிஸ் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மேலும் ஒரு அணி இணைந்து நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து.

ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு தொடர்ந்து நடத்தினால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் தொடர்கள் பாதிக்கக்கூடும் என்று இங்கிலாந்து அணி ஆலோசனை வழங்கியது. இருந்தாலும் இந்த தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என கங்குலி மும்முரமாக உள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக நான்கு நாடுகள் கொண்ட சூப்பர் சீரிஸ் தொடரை நடத்துவது தான் இவர்களின் திட்டம்.

Ganguly

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார் கங்குலி. இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு முடிவை கொண்டுவரவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் கங்குலி நினைத்த திட்டம் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement