இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைசிறந்த கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதன் காரணமாக ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு பற்றிய ஒரு சிறிய செய்தியை நாங்கள் உங்களுக்கு இந்த பதிவின் மூலமாக தெரிவிக்கிறோம். இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் செய்தி இன்று இணையத்தில் வைரல் ஆன செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அது யாதெனில் கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாடி கொண்டிருக்கும்போது கங்குலி தொடர்ந்து இரண்டு போட்டிகளாக தன்னுடைய 99ஆம் நம்பர் ஜெஸ்ஸி விடுத்து ரெய்னாவின் ஜெர்சியை அணிந்து விளையாடினார். அந்த இரண்டு போட்டியிலும் அவர் முறையே 98 ரன்கள் மற்றும் 13 ரன்கள் குவித்தார். அந்த இரண்டு போட்டியில் இந்திய அணி வென்றது.
இருப்பினும் அந்த இரண்டு போட்டியிலும் ரெய்னாவின் ஜெர்சியை அணிந்து ஆட காரணம் ஒரு ஜாலியான சுவாரஸ்யமான நிகழ்வு அது யாதெனில் அந்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வரவழைக்கப்பட்ட ஜெஸ்ஸியின் அளவு சரியாக அமையாததால் அவருக்கு அளவு பத்தவில்லை என்று மாற்று ஜெர்சியை தேடிய கங்குலி 91 என்று குறிக்கப்பட்ட ரெய்னாவின் ஜெஸ்ஸி அணிந்தார். ஏனெனில் கங்குலியின் ஜெர்சி நம்பர் 99 என்பது நாம் அறிந்ததே. இதனால் 90க்கு மேல் உள்ள நம்பரான 91 நம்பர் கொண்ட சுரேஷ் ரெய்னாவின் ஜெர்சியை அணிந்து அவர் ஆடினார்.