உன்ன டீம்ல இருந்து தூக்கிடுவேன். சேவாக்கை மட்டுமல்ல யுவ்ராஜையும் எச்சரித்த கங்குலி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

ரோகித் சர்மாவிற்கு தோனி எப்படி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உதவினாரோ அதேபோல் விரேந்தர் சேவாக்கிற்க்கு காட்பாதராக இருந்தவர் சௌரவ் கங்குலி. சேவாக் துவக்கத்தில் கங்குலியின் தலைமையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். விரேந்தர் சேவாக் தொடர்ச்சியாக சொதப்பிக் கொண்டே இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக சௌரவ் கங்குலி அற்புதமான ஒரு முடிவை எடுத்து சேவாக்கை தொடக்க வீரராக களம் இறங்கிவிட்டார். அவ்வளவுதான் காரியம். அதன் பின்னர் 10 ஆண்டுகள் அசைக்க முடியாமல் இந்திய அணியின் தொடக்க இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார் விரேந்தர் சேவாக்.
இந்நிலையில் தான் சரியாக ஆடாத காலகட்டத்தில் சௌரவ் கங்குலி என்னவெல்லாம் கூறினார் என்று கூறியுள்ளார் சேவாக்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் சில தொடர்களில் சரியாக ஆடாமல் இருந்தேன். ஒருநாள் கங்குலி என்னிடம் வந்து நீ இன்னைக்கு ஒழுங்காக ஆடவில்லை என்றால் இனிமேல் உன்னை அணியில் என்னால் உன்னை பார்க்க முடியாது. இதனைக் கேட்ட நான் உடனடியாக அந்த போட்டியிலேயே சதம் அடித்தேன்.

நல்லவேளையாக அந்த சதம் தான் என்னை அடுத்த 10 ஆண்டுகளில் அணியில் வைத்திருந்தது. யுவராஜ் சிங்கிற்கும் கங்குலி இதையேதான் செய்தார். பல வாய்ப்புகள் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார் விரேந்தர் சேவாக்.

- Advertisement -

இதன் பின்னர்தான் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் விளாசினார். ஒருநாள் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் விளாசினார். தொடர்ச்சியாக துவக்க வீரராக இறங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிரடி காட்டிக்கொண்டிருந்தார் . இதற்கெல்லாம் காரணம் சௌரவ் கங்குலி தான்

Ganguly

கங்குலி தலைமையில் தான் துவண்டு கிடந்த இந்தியா எழுச்சி பெற்றது. அவரது தலைமையில் ஜாஹீர் கான், ஹர்பஜன் சிங், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப் என பல இளம் வீரர்கள் எழுச்சிபெற்றனர். அவர்களை வைத்து சிறந்த கோர் அணியை உருவாக்கிய கங்குலி தொடர்ந்து பல தொடர்களை வெற்றிபெற்று சர்வதேச அளவில் இந்திய அணியின் தரத்தை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement