இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி இந்திய அணி டெஸ்ட் போட்டியின் மாற்றம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் கங்குலி கூறியதாவது : இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
ஆனால் பேட்டிங்கில் துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இனிவரும் டெஸ்ட் தொடர்களில் துவக்க ஜோடியை மாற்றி பார்க்கவேண்டும். துவக்க ஜோடியை மாற்றி அணியின் வலுவை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷில் இந்திய அணி சிறப்பான தாக்கத்தை அளிக்க முடியும் என்று கங்குலி கூறினார்.
இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இந்த மாத இறுதியில் டெஸ்ட் தொடரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.