கண்டிப்பாக மீண்டும் இந்திய அணியின் தொப்பியை அணிந்து பயிற்சியாளராக பொறுப்பேற்பேன் – முன்னாள் இந்திய கேப்டன் சபதம்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்று முன்தினத்தோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியதாவது : நான் ஒரு நாள் நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்பேன் மீண்டும் இந்திய அணியின் தொப்பியை அணிந்து மைதானத்தில் வீரர்களுடன் வலம் வருவேன். தற்போது நான் மற்ற கிரிக்கெட் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் என்னுடைய விருப்பம் இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பது தான் என்று தெரிவித்தார்.

sourav-ganguly-ms-dhoni

அவ்வாறு நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றவுடன் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பை முறையாக தருவேன். இளம் வீரர்கள் இந்திய அணியை வளம்பெறச் செய்வார்கள் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன் என்று கங்குலி தெரிவித்தார். கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராகவும், ஐசிசியின் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement