டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்க இதுவே காரணம் – கங்குலி பெருமிதம்

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

Archer

- Advertisement -

அதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி போட்டியை டிரா செய்தாலும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஏனெனில் ஒருபுறம் ஸ்மித்தின் அற்புதமான ஆட்டம், மறுபுறம் ஆர்ச்சரின்அனல் பறக்கும் வேகம் என போட்டியை சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டதாவது :ஆஷஸ் தொடர் போன்ற தரமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதால் தான் டெஸ்ட் கிரிக்கெட் உயிரோடு உள்ளது என்று பாராட்டியுள்ளார்.

அனல் பறக்கும் ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிருடன் வைத்துள்ளது. உலகின் மற்ற அணிகள் தங்களது தரத்தை உயர்த்த வேண்டிய நேரம் இது என்று கங்குலி தனது ட்விட்டர் கருத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement