உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எந்த மைதானத்தில் நடக்கிறது ? – கங்குலி விளக்கம்

INDvsNZ

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதியும் அடைந்தது. வருகிற ஜூன் மாதம் 18 ஆம் தேதி நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி லார்ட்ஸ் மைதானத்தில் தான் இறுதிப் போட்டி நடக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டி அங்கு நடக்கப்போவதில்லை என்று ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

ind

இந்நிலையில் இறுதிப்போட்டி அங்கு ஏன் நடக்கப்போவதில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கங்குலி , அண்மை நாட்களாக லார்ட்ஸ் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா மிக அதிக அளவில் பரவி வந்துள்ளது. அங்கு இறுதிப்போட்டி நடத்தப்பட்டால் வீரர்கள் நிச்சயம் கொரோனா தொற்றுக்கு ஆளாவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அங்கு நடத்தக்கூடாது என்று திட்டமிட்டோம்.

கொரோனா தொற்று மிக அதிகம் இல்லாத மைதானத்தில் போட்டி நடத்த எண்ணினோம். அதன் படி சவுத்தாம்ப்டனில் போட்டியை நடத்த சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டோம். ஏனெனில் அங்குதான் கொரோனா பரவல் கொஞ்சம் கம்மியாக உள்ளது. மேலும் இரு அணி வீரர்களுக்கும் தங்கும் வசதி, பயிற்சி மற்றும் பயோ பபுள் என அனைத்திற்கும் சவுதாம்ப்டன் நகரே சரியாக இருக்கும் என்பதால் அங்கு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

INDvsNZ

எனவே வீரர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சௌரவ் கங்குலி கூறினார்.

- Advertisement -

INDvsNZ

மேலும் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றும் அதே போல் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நடக்கவுள்ள இறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.