இதில் என் முடிவு எதுவுமில்லை. கோலியே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

பி.சி.சி.ஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி தற்போது அளித்த ஒரு பேட்டியில் : கேஎல் ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும் இதேபோல் தொடர்வார் அப்போது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Rahul

- Advertisement -

இதனையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் சாம்சன் ஆகியோர் குறித்து கேள்வி எழுந்தது. ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு ராகுலை கீப்பராக செயல்பட வைப்பது பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு கங்குலி பதில் அளித்தபோது : ராகுல் குறித்த முடிவையோ அல்லது அணி குறித்த எந்த ஒரு முடிவையும் நான் எடுப்பது கிடையாது விராட் கோலி தான் அந்த முடிவை எடுக்கிறார்.

அணி நிர்வாகமும், பயிற்சியாளரும் ராகுல் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிறார்கள். ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப காலத்தில் சிறப்பாக ஆடினார் பிறகு சற்று பின்னடைவு கண்டார். ஆனால் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அசத்தி வரும் அவரை கீப்பராக விளையாட வைக்கும் அனைத்து முடிவுகளை எடுத்தது கோலி மற்றும் நிர்வாகமே எடுக்கிறது.

Kohli

இதில் என்னுடைய தனிப்பட்ட முடிவு எதுவும் இல்லை. அதேபோன்று அணியில் விக்கெட் கீப்பர் போட்டி இருப்பது ஆரோக்கியமானதே. ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதையே கோலி முடிவு செய்கிறார் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement