டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் இந்த இடத்தில் களமிறங்கினால் தான் நன்றாக இருக்கும் – கங்குலி கருத்து

Ganguly

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று (22 ஆம் தேதி) இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

ind

முதல் டெஸ்ட் போட்டியான இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணிக்கு முக்கிய சவால் ரோஹித்தை தேர்ந்தெடுப்பதா அல்லது ரஹானேவை தேர்ந்தெடுப்பதா ? என்பதுதான் ரோகித்சர்மா உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன் அவர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அதனைப் போன்றே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும்.

hitman

மேலும் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரோகித் தொடக்க வீரராக களமிறங்குவது எனது விருப்பம் என்று கங்குலி தெரிவித்தார்.