Worldcup : உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம் குறித்து பேசிய – கங்குலி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Ganguly
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட் தேர்வாகாதது குறித்து கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பண்ட் இந்திய அணியில் தேர்வாகாதது வருத்தம் தான். இருப்பினும் தேர்வுக்குழுவினர் தினேஷ் கார்த்திகை அனுபவத்தின் மூலம் தேர்வு செய்துள்ளனர். அவர்களின் முடிவின்படி அவர் நன்றாக விளையாடட்டும் தேர்வுக்குழுவின் முடிவு தவறில்லை என்று நிரூபிக்கட்டும். மொத்தத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றுவதே நம் இலக்கு.

pant 2

பண்ட் இளம் வீரர் அவருக்கு திறமை இருக்கிறது கூடவே நேரமும் இருக்கிறது. தோனி மற்றும் கார்த்திக் இன்னும் வெகு சில மாதங்களோ அல்லது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஆடுவார்கள் அடுத்து அவர்கள் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள். எனவே, பண்ட்க்கு எதிகாலம் பிரகாசமாக இருக்கிறது அவரே இந்திய அணியின் நீண்ட கீப்பராகவும், சிறந்த அதிரடி வீரராகவும் தோனியை போன்று சிறந்த வீரராகவும் வலம்வருவார் என்று கங்குலி கூறினார்.

Advertisement