இனிமேல் ராகுல் விளையாடனுனா இதுமட்டும் தான். அவருக்கு ஒரே வாய்ப்பு – கங்குலி பேட்டி

Ganguly

இந்திய அணியின் இளம் வீரரான கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரை அணியிலிருந்து தேர்வுக்குழு நீக்கியது. மேலும் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரிடம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. அதற்கு காரணம் யாதெனில் உலக கோப்பை தொடரிலும் ராகுல் தனது இடத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
அவரின் ஆட்டம் படு மோசமாக அமைந்தது.

rahul1

இதனால் அதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் அணியில் சேர்க்கப்பட்டாலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக இறங்கிய ஐயர் சிறப்பாக விளையாடி வருகிறார். தென்னாப்பிரிக்க தொடரிலும் அவரே இந்திய அணியில் தொடருகிறார் இதனால் தற்போது ராகுலின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து கங்குலி தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். என்னதான் திறமையான வீரராக இருந்தாலும் தன்னை நிரூபிக்க வேண்டும் அப்போதுதான் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும். அந்த வகையில் ஐயர் தற்போது சிறப்பாக விளையாடி வருவதால் ராகுல் இனிமேல் நடுவரிசையில் ஆடுவது கடினம் தான். அதேபோன்று ராகுல் தற்போது விளையாட வாய்ப்பு என்றால் ஒரே ஒரு முறையில் தான் கிடைக்கும்.

அதுயாதெனில் தவான் மற்றும் ரோகித் ஆகிய இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அவரால் துவக்க வீரராக களமிறங்க முடியும். அதிலும் துவக்க வீரராக களமிறங்கும் ராகுல் தனது திறமையை நிரூபித்தாக வேண்டும். இல்லையெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் கில், ப்ரித்வி ஷா போன்ற பல வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் ராகுலிடம் இனிமேலும் கடினம் தான் என்று கங்குலி பேட்டி அளிப்பது பேட்டி அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -