எதுவும் தெரியாம என்கிட்ட பேச வராதீங்க. விமர்சங்களுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்த – தாதா கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான மூன்று விதமான இந்திய அணியும் சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தொடருக்கு தேர்வான சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதன் காரணமாக டி20 அணியில் தேர்வாகிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடரில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மாவின் நிலை இதுவரை முழுவதுமாக என்னவென்று தெரியவில்லை.

- Advertisement -

மேலும் கீப்பராக இடம்பெற்றிருந்த சகாவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரது இடமும் அணியில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர் ஆஸ்திரேலியா சென்று உள்ளார். அவர் விளையாடுவாரா ? மாட்டாரா ? என்பது குறித்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் இது குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

rohith

மேலும் வீரர்கள் காயம் குறித்து கேள்விகளை கேட்டு வருவதால் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலி இதனை அறிந்து கோபத்தில் சில கருத்துக்களை காட்டமாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வீரர்களின் காயங்கள் குறித்த விவரம் பிசிசிஐ நிர்வாகத்திற்கும், அணியின் பிசியோ மற்றும் NCAக்கு மட்டுமே தெரியும். பிசிசிஐ எப்படி தற்போது இயங்குகிறது என்பது யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Ganguly

மேலும் அணி வீரர்களின் காயம் குறித்த எந்த விவரமும் இல்லாமல் சில விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இவையெல்லாம் தேவையான விடயம் கிடையாது. வீரர்களின் நிலை குறித்து பிசிசிஐக்கு தெளிவாக தெரியும் என்று நேரடியாக தனது பதிலை கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கங்குலி குறித்து முன்னாள் தேர்வுழுக்குழு தலைவர் வெங்சர்க்கார் பேசியிருந்தார். அவருக்கு பதிலடி தரும் விதமாகவே கங்குலி இந்த கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement