இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு கீப்பராக மற்றும் ஒரு பினிஷராக அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

ஆனால் கடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததிலிருந்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதன்பிறகு இந்திய அணிக்கு கீப்பராக பண்டை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்தது. துவக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த பண்ட் தற்போது தனது ஆட்டத்தைத் சொதப்பலாக ஆடி வருகிறார்.
எனவே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பண்ட் ஆட்டம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அவர் விளையாட விளையாட தான் கற்றுக் கொள்வார். மேலும் இப்போது உள்ள இளம் வீரர்களுக்கு கேப்டனின் ஆதரவு அதிகம் தேவைப்படும்.

அந்தவகையில் பண்டுக்கு அதிக ஆதரவு தேவைப்படுகிறது. அதேபோன்று கோலியும் தொடர்ந்து பண்ட்டிற்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். என்னை பொருத்தவரை பண்ட் இப்போது சிறப்பாக ஆடவில்லை என்றாலும் அவர் அனைத்து வகை கிரிக்கெட் இருக்கும் சிறந்த கீப்பராக மற்றும் சிறந்த வீரராக மாறுவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று கங்குலி கூறினார்.



