அவர் விளையாடுறதும், விளையாடாததும் அவர் இஷ்டம் – கங்குலி பேட்டி

Ganguly
- Advertisement -

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தற்போது இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

IND

- Advertisement -

இந்த தொடர் வரும் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அட்டவணை வெளியாகி இருந்தாலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் இந்திய அணி கேப்டன் கோலி இந்த டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது இன்று பிசிசிஐயின் புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்க உள்ளார் இந்நிலையில் அவரிடம் வங்கதேச தொடர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்த பதிலாவது :நாளை நான் கோலியை சந்தித்து பேசயிருக்கிறேன். பிசிசிஐ தலைவராக இந்திய கேப்டனிடம் என்னென்ன கேட்க முடியுமோ அதையெல்லாம் அவரிடம் கேட்டு இந்திய அணியின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற உள்ளேன்.

Kohli

மேலும் தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் கோலி வரும் வங்கதேச தொடரில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது அவருடைய விருப்பம் அதன்படி அவர் சுயமுடிவு எடுக்கட்டும். அவர் விளையாட வேண்டும் என்றால் விளையாடலாம் அல்லது தற்போது சிறிது ஓய்வு தேவை என்றாலும் அவருக்கு ஓய்வு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement