கோலி இதனை கேப்டனாக செய்தே ஆக வேண்டும். அப்போதுதான் நல்லா இருக்கும் – கங்குலி அட்வைஸ்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் அனுபவ வீரர் அஸ்வின் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விராத் கோலி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : என்னை பொருத்தவரை விராட் கோலி இந்திய அணி தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் புதிதாக வீரர்களை அணியில் எடுக்கும் பொழுது அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அருமையாக விளையாடினார். அதே போன்று மற்றவர்களுக்கும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். விராட் கோலி இதனை விரைவில் புரிந்து கொண்டு நடப்பார்கள் என்று நான் நம்புகிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் மற்றும் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ashwin 2

ஏனெனில் குல்தீப் யாதவ் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் கழற்றிவிடப்பட்டது ஆச்சரியம் தான் மேலும் அஸ்வினும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. இந்திய அணியின் வீரர்கள் இடையே அதிக போட்டி நிலவுவது நல்ல விஷயம்தான் அதேபோன்று இந்திய அணித்தேர்வில் கோலி தனது கவனத்தை அதிகமாக செலுத்த வேண்டும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement