சும்மா ஒன்னும் தோனியை 3 ஆம் இடத்தில் இறக்கி விடல. அதற்கான காரணம் இதுதான் – கங்குலி பகிர்ந்த சுவாரசிய கதை

Ganguly

தோனி கங்குலியின் தலைமையில் அறிமுகமானவர். அவ்வாறு அறிமுகமானாலும் முதல் நான்கு போட்டிகளில் சொற்ப இலக்கங்களில் தான் ரன் எடுத்திருந்தார். முதல் போட்டியில் டக் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஆடிய 5வது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தான் பட்டையை கிளப்பிய தோனி 148 ரன்கள் விளாசினார்.

Dhoni

இதன் மூலம் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனியை அந்த குறிப்பிட்ட போட்டியில் மூன்றாம் இடத்தில் ஏன் இறக்கினார் என்பது பற்றி சௌரவ் கங்குலி பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்…தோனிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் மூன்றாவது இடத்தில் இறங்க வாய்ப்பு கொடுத்தேன். அற்புதமாக சதமடித்தார் .

தோனி எப்போதெல்லாம் அதிக ஓவர் பேட்டிங் பிடிக்கிறாரோ அப்போதெல்லாம் மிகப்பெரிய ரன்கள் அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் ஆறாம் இடத்தில் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தால் அவர் இப்போது இருக்கும் சச்சின் டெண்டுல்கர் ஆக மாறி இருக்க முடியாது. அவருக்கு துவக்க இடத்தில் ஆட வாய்ப்பு கொடுத்ததால் தான் இப்போது சச்சின் டெண்டுல்கர் உருவாகியிருக்கிறார்.

தோனி இந்திய அணிக்கு அறிமுகமாகும் முன் சேலஞ்சர் கோப்பை என்ற ஒரு தொடர் நடைபெற்றது.
உள்ளூர் போட்டியான இந்த தொடரில் எனது அணியில் ஆடினார் தோனி. அப்போது தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அப்போது எனக்கு தெரியும் இந்த இளைஞனால் அதிரடியாக ஆட முடியும் என்று மேலும் தோனியிடம் இயற்கையிலேயே பெரிய பெரிய சிக்ஸ் அடிக்கும் திறனை பார்த்தேன்.

- Advertisement -

Dhoni 3

அதன் காரணமாகத்தான் அவரை விசாகப்பட்டினம் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாவது இடத்தில் இறக்கிவிட்டேன். எப்போதும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.
அவர் ஆடும் ஆட்டத்தை பார்த்துதான் மூன்றாவது இடத்தில் இறக்கிவிட்டேன். வெறுமனே அவரை நான் இறக்கி விடவில்லை என்று தெரிவித்துள்ளார் கங்குலி. இதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் அடித்தார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.