தோனியை கண்டெடுத்து அணியில் சேர்த்துக்கு காரணம் இதுதான் – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் இத்துடன் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தோனிக்கு 15 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. சமீபத்தில் தோனி இந்திய அணியில் விளையாட முடியாமல் இருப்பதால் அவர் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

Dhoni-4

அந்த வகையில் தற்போது தோனி அறிமுகமான போட்டி குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கங்குலி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த தகவலின் ஒரு தொகுப்பை இங்கே இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். தோனி இந்திய அணியில் அறிமுகமான முதல் போட்டியை அனைவரும் மறக்க முடியாத ஒரு போட்டியாக மாறிவிட்டது. ஏனெனில் ரன் எதுவும் எடுக்காமல் அந்த போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்த்த தோனியை சரியான நேரத்தில் வாய்ப்பு கொடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வைத்தார் அப்போது இருந்த கேப்டன் கங்குலி. அந்த வாய்ப்பினை பயன்படுத்திய தோனி மூன்றாவது வீரராக களமிறங்கி 148 ரன்கள் அடித்து தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை அந்தப் போட்டியில் ஆழமாக பதித்தார்.

Dhoni

அதன் பிறகு தோனி தொட்டதை எல்லாமே சக்சஸ் தான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த தோனிக்கு 2007 ஆம் ஆண்டு கேப்டன் பதவி கொடுக்கப் பட்டு டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் என அனைத்தையும் கேப்டனாக தோனி வென்று கொடுத்தார். அதன் பின்னர் தற்போது வரை இந்திய கிரிக்கெட் விளையாடி வரும் தோனி ஒரு சாம்பியனாக பார்க்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

அப்படி அவருக்கு அந்த முதல் வாய்ப்பை வழங்கியது கங்குலி தான். அவரே தோனியை மூன்றாவது வீரராக இறக்கி அவரது திறமையை உலகிற்கு காண்பித்தார். இதுகுறித்து பிசிசிஐ நேரலையில் மயங்க் அகர்வால் தோனியை தாங்கள் அறிமுகம் செய்து வைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் மேலும் அவர் உங்களால் தேர்வுசெய்யப்பட்ட கங்குலி குறித்து உங்களது கருத்து என்ன என்று நேரலையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

Ganguly

அதற்கு பதில் அளித்த கங்குலி கூறுகையில் : சிறந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது எனது கடமை. ஒரு கேப்டனாக நான் அனைத்து விதத்திலும் யோசித்து செயல்பட வேண்டும் சில நேரங்களில் உள்ளுணர்வு தோன்றும். அந்த உள்ளுணர்வை கேட்டால் நிச்சயம் நல்ல பலனே கிடைக்கும். அதன்படி தோனி விஷயத்திலும் எனக்கு அவ்வாறு தான் தோன்றியது தோனி ஒரு மிகச்சிறந்த வீரராக இந்திய அணிக்கு இருப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன்.

மேலும் அவருக்கு நான் வாய்ப்பளித்தது மிகவும் பெருமை அடைகிறேன். இந்த அளவிற்கு தோனி இன்று உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல பினிசர் மட்டுமல்ல ஒரு சிறந்த வீரரும் கூட ஏனெனில் நான் கேப்டனாக இருந்தபோது அவரை மூன்றாவது இடத்தில் இறக்கி விட்டு பல போட்டிகளில் சிறப்பாக விளையாட வைத்திருக்கிறேன் என்றும் தோனிக்கு கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement