தோனியை தேர்வுசெய்த போது கங்குலி கூறியது இதுதான் – இந்திய மேலாளர் ஓபன் டாக்

Ganguly-1
- Advertisement -

இந்திய அணிக்காக தோனி 2004-ஆம் ஆண்டு அறிமுகமானார். கங்குலியின் தலைமையில் அறிமுகமான அவர் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முக்கிய வீரராக போட்டியில் விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட 16 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி விட்டார் .

Dhoni 1

இவர் படைக்காத சாதனைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு ஒரு கேப்டனாக கோப்பைகளை வாங்கிக் குவித்திருக்கிறார் தோனி. இந்நிலையில் தோனி 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானபோது கங்குலி அவரை பாராட்டி பல வார்த்தைகள் பேசியுள்ளார். இந்த வார்த்தைகளை தற்போது வெளியே கூறியுள்ளார் அப்போது இந்திய அணியின் மேலாளர் மேலாளராக இருந்த ஜாய் பட்டாச்சார்யா. அவர் கூறுகையில்..

- Advertisement -

2004ம் ஆண்டு வங்கதேச தொடருக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது நான் சௌரவ் கங்குலின் அருகில் அமர்ந்து இருந்தேன். அப்போது அவர் தோனியை காட்டி..

Ganguly-dhoni

நான் ஒரு சாட்டையடி வீரன் அணியில் தேர்ந்து எடுத்து வைத்திருக்கிறேன். இவரைப் பார்த்துக் கொண்டே இருங்கள் மிகப் பெரிய வீரராக வரப்போகிறார் என்று புகழ்ந்து பேசினார். அதனை நான் அப்போது நம்பவில்லை. ஆனால் காலங்கள் ஓடி விட்டது இப்போது தோனியை பார்த்தால் ஒரு மிகப்பெரும் சாட்டையடி வீரனாக வளர்ந்து நிற்கிறார் என்று கூறியுள்ளார் ஜாய் பட்டாச்சார்யா.

Dhoni 3

இவர் கூறியது உண்மைதான் அதன் பின்னர் நடந்ததெல்லாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏறுமுகமாக தான் இருந்தது. தோனியின் தலைமையில் தான் இந்திய அணி இரண்டு உலகக் கோப்பை தொடர்களையும் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை கோப்பை தொடரையும் வென்று அசத்தியது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement