தோனியின் இந்த ஒருஷாட் கிரிக்கெட் உள்ளவரை நிலைத்திருக்கும் – கங்குலி புகழாரம்

Ganguly
- Advertisement -

இந்திய அணியை கங்குலிக்கு பிறகு நன்றாக வழிநடத்திச் சென்றவர் என்றால் அது தோனி மட்டுமே. தற்போது விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டாலும் முக்கிய கோப்பைகளை வெல்லும் அளவிற்கு இன்னும் கோலி எதையும் சாதிக்கவில்லை. ஐ.சி.சி நடத்தும் கோப்பைகளை தவறவிடும் கோலி மற்றவகையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

dhoni

- Advertisement -

ஆனால் தோனி ஐசிசி நடத்திய மூன்று வகையான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனத்திற்கு நேரலையில் பேட்டி அளித்த கங்குலி தோனியின் தலைமைப் பண்பு குறித்து உரையாடினார். அப்போது 2003 மற்றும் 2011ம் ஆண்டு உலக கோப்பையையும் அவர் உதாரணமாகக் காட்டி பேசியிருந்தார்.

2003 ஆம் ஆண்டு இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது அந்த ஒரு தோல்வி ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்கலங்க வைத்தது. அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்று கனவை நனவாக்கியது.

yuvidhoni

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களில் சுமார் 8 பேர் எனது தலைமையின் கீழ் கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக யுவராஜ், ஹர்பஜன், நெஹ்ரா, சேவாக், தோனி ஆகியோர் எனது கேப்டன்சியின் கீழே கிரிக்கெட்டை துவங்கினார்கள்.

- Advertisement -

நான் கேப்டனாக இருந்த போது அவர்களை கண்டு எடுத்ததற்காக இன்னும் பெருமிதம் கொள்கிறேன். உள்நாடு மற்றும் வெளிநாடு என சிறப்பாக விளையாடிய கூடிய ஒரு வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்து இருப்பதை நினைத்து எனக்கு மிகவும் பெருமை, ஒரு கேப்டனாக இதைவிட எனக்கு வேற என்ன வேண்டும் என்று கூறியுள்ளார்.

dhoni1

மேலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை நிகழ்வு குறித்து பேசிய அவர் : தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸர் கிரிக்கெட் உள்ள வரை அனைவரது நினைவில் இருக்கும் என்று பெருமையாக பேசி உள்ளார். மேலும் தோனி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார் அதே போன்று தற்போது கோலி அந்த பாதையில் வழி நடத்திச் செல்கிறார் என்றும் விரைவில் கோலி சாதிப்பார் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement