- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியை அணியில் இருந்து நீக்கியது நான் எதிர்பார்த்தது தான் – கங்குலி ஓபன்டாக்

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் கங்குலி தோனி குறித்து கூறியதாவது : தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணியில் டோனி இடம்பெறாதது நான் எதிர்பார்த்ததுதான். மேலும் இதை வைத்து அவரின் எதிர்காலத்தை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளனர் என்றும் தோன்றுகிறது. பண்ட்டுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க அணி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கோலி தோனியிடம் நன்றாக பேசுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல. அதேநேரம் டோனியிடம் கோலி கேப்டனாக போட்டியில் என்ன எதிர்பார்க்கிறார் என்று கூறவேண்டும். டோனிக்கும் தேர்வுக்குழு நிர்வாகத்திற்கும் என்ன பேச்சு வார்த்தை நடக்கிறது என்பதில் நான் கொஞ்சம் தள்ளி நிற்கிறேன் என்று கங்குலி கூறினார்.

- Advertisement -
Published by