- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி நீங்க இதை புரிந்து கொண்டே ஆகவேண்டும். உங்கள் நேரம் இதுதான் – கங்குலி அட்வைஸ்

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி உலக கோப்பை தொடர் உடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அவர் ஓய்வு அறிவிப்பு வெளியிடாமல் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ராணுவ பயிற்சியில் கலந்துகொண்ட தோனி அதனை முழுவதுமாக முடித்துக் கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா? அல்லது தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா/ என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது இந்நிலையில் இதற்கான பதில் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இது தோனி ஓய்வை அறிவிக்கும் நேரம் அதே நேரம் இளைஞர்களுக்கு தோனி வழி கொடுக்க வேண்டிய நேரம் ஆகும். இதை தோனி நினைக்க வேண்டும் தோனிக்கு இளமை திரும்பவில்லை. மேலும் ஓய்வு முடிவு என்பது கிரிக்கெட் வீரருக்கு ஒரு கட்டத்தில் எடுக்க வேண்டிய ஒரு முடிவு தான் அதனால் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க நினைப்பார் என்று கருதுகிறேன்.

ஏனெனில் பண்ட் தற்போது சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் என்ன நினைக்கிறார்களோ அதுவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இனிமேல் தோனி அணியில் இடம்பெறுவது கொஞ்சம் கடினம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Published by