அவரைப்பற்றி உட்கார்ந்து யோசித்தால் வாவ் என்றே தோன்றுகிறது. தோனிக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி ஓய்வு குறித்து தான் இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni-1

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ-யின் புதிய தலைவராக கங்குலி நேற்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பின் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தோனியின் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசினார். அதில் கங்குலி தோனி குறித்து கூறியதாவது : தோனி மனதில் என்ன உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை இருப்பினும் தோனி போன்ற வீரர் இந்தியாவுக்கு கிடைத்தது ஒரு பெருமையான விடயம்.

நான் இருக்கும் வரை அணி வீரர்கள் அனைவரும் மதிக்கப்படுவார்கள் அப்படி நான் அணியில் ஒரு வீரராக தான் தோனியை பார்க்கிறேன். அவரைப் பற்றி உட்கார்ந்து யோசித்தால் நமக்கு அவர் செய்த சாதனைகள் நிச்சயம் பெருமை அளிக்கும். மேலும் நான் அவரைப் பற்றி யோசித்தால் “வாவ்” என்றே தோன்றுகிறது. அவரின் எதிர்காலம் குறித்து அவரிடம் நான் இதுவரை பேசவில்லை ஆனால் விரைவில் அவரிடம் இது குறித்து பேசுவேன்.

Dhoni-1

மேலும் நான் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட போதும் மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து வந்து விளையாடினேன். அதைப்போல சாம்பியன்கள் அவ்வளவு விரைவாக அவர்களை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்கள். மேலும் இந்திய கிரிக்கெட்டின் கிரேட் வீரர்களில் தோனியும் ஒருவர் அவருக்கு உரிய மரியாதை நான் இருக்கும் வரை கொடுக்கப்படும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார்.

Advertisement