தோனி நிச்சயம் ஓய்வு குறித்த முடிவை இவரிடம் கூறியிருப்பார் – கங்குலி பேட்டி

Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Dhoni-1

இந்நிலையில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி எனது ஓய்வு முடிவு குறித்தும் எனது கிரிக்கெட் குறித்தும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிசிசிஐயின் தலைவர் கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தோனி நிச்சயம் கேப்டன் விராட் கோலியிடம் மற்றும் தேர்வுக்குழுவினரிடமும் பேசியிருப்பார். அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ என்பது அவரின் முடிவு அது எனக்கு தெரியாது. இதுவரை நான் தோனியிடம் ஓய்வு குறித்து பேசவில்லை. அவர் ஒரு சாம்பியன் என்று நான் உறுதியாக சொல்வேன். தோனி போன்று வீரரை பெறுவதென்பது மிகக் கடினம். மிக விரைவில் நீங்கள் ஒரு மற்றொரு தோனியை பெற மாட்டீர்கள்.

Dhoni

மேலும் அவர் விளையாடுகிறாரா ? விளையாடவில்லையா ? என்பது அவருடைய ஒரு விருப்பம் அவருக்கே அது உரியது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாதது குறித்து கேப்டன் கோலியிடமும் ரவிசாஸ்திரியிடமும் ஆலோசனை நடத்த உள்ளேன். பெரிய தொடரில் இந்திய அணிக்கு உள்ள தடைகளை தகர்த்து வேண்டும் என்றும் கங்குலி பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -