INDIA : பும்ரா நம்பர் 1 ஆக இருந்தாலும் இந்த பவுலரைத்தான் எனக்கு பிடிக்கும் – கங்குலி

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட

Ganguly

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

bumrah 1

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் தனக்கு பிடித்த இந்திய பந்துவீச்சாளர் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது பௌலிங் சிறப்பாக உள்ளது. அனைவருமே பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக பும்ரா திகழ்கிறார். மேலும் கடந்த ஒரு ஆண்டாக ஷமி சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனினும் இவர்கள் இருவரை தாண்டியும் எனக்கு புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவரது வேகம் இப்போது குறைந்தாலும் அவருடைய ஸ்விங் பந்து வீச்சின் மூலம் எதிரணியை திணற வைப்பார்.

bhuvi

மேலும் கடந்த ஆறு மாதங்களாக பார்மில் இல்லாமல் இருந்தாலும் அவர் மீண்டும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி வெற்றியைத் தேடித் தருவார் என்று கங்குலி கூறினார்.

- Advertisement -