பண்ட் தோனியாக மாற இத்தனை வருடங்கள் ஆகும். பண்டிற்கு ஆதரவாக பேசிய – கங்குலி

Ganguly
- Advertisement -

தோனிக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறார். பண்ட் அறிமுகமானபோது தனது அதிரடியால் அசத்திய அவர் தற்போது தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறார்.

pant 1

- Advertisement -

மேலும் கடந்த பல தொடர்களாக அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டுமே மோசமாக உள்ளதால் அவரை அணியில் இருந்து நீக்கும்படி எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக கடந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவர் ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்ட போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி தோனி என்று கோஷமிட்டனர். இதனால் பண்ட் மிகவும் வருத்தத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் பண்டுக்கு ஆதரவாக கேப்டன் கோலி ஏற்கனவே பேசியிருந்தார். இந்நிலையில் மேலும் தற்போது பிசிசிஐயின் தலைவராக கங்குலி பண்ட் குறித்து ஆதரவாக ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : மைதானத்தில் ரசிகர்கள் பண்டிடம் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்ப்பது நல்லது தான். அதை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் அதனை அவர் கற்றுக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை தரவேண்டும்.

Pant 2

ஆனால் அவர் தற்போது மிகவும் நெருக்கடியில் உள்ளார். நெருக்கடியை உணர்ந்து விளையாடினால் அவருடைய முழு திறமை வெளிவராது. எனவே அவர் சிறிது சொதப்பினாலும் இயல்பாக ஆடட்டும் ஒவ்வொருநாளும் அவரிடமிருந்து நீங்கள் தோனியை பெற இயலாது. தோனியை போன்று பண்ட் மாறுவதற்கு இன்னும் 15 வருடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கங்குலி ஆதரவாக பேசி உள்ளார்.

Samson-1

ஆனால் பண்டின் இடத்தை தற்போது சஞ்சு சாம்சன் குறிவைத்து வருவதால் விரைவில் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகவேண்டும் இல்லையெனில் பண்டின் இடம் நிச்சயம் சாம்சனுக்கு செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Advertisement