இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி நடக்க இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் தொடரோடு முடிவு பெற இருப்பதால் தற்போது பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க ஆயத்தமாகி வருகிறது. புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்ப காலக்கெடு நேற்றோடு முடிவடைந்து.

கபில்தேவ் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய குழு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆம் தேதி நேர்காணல் நடத்த உள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, ஜெயவர்த்தனே, மைக் ஹெசன், ராபின் சிங் மற்றும் ஜிம்பாப்வே பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் குறித்து எந்த தகவலும், ஆதரவும் கோலி அளிக்கக்கூடாது என்று பிசிசிஐ கட்டளையிட்டது. ஆனால் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கோலிக்கு பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது குறித்து பேச அனைத்து உரிமையும் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏனெனில் அவர் இந்திய அணியின் கேப்டன் தலைமைச் பயிற்சியாளர் பதிவிற்கு யார் வரலாம் என்று கூற அவருக்கு முழு அதிகாரம் உண்டு என்று கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக 2017 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியை பயிற்சியாளரை தேர்வு செய்த குழுவில் கங்குலி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



