நாங்க 4 பேர். அந்த 10 வருஷம். இன்னைக்கு கூட மறக்கமுடியல – பழைய டான் க்ரூப் புகைப்படத்தை பகிர்ந்த கங்குலி

Laxman
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் பத்து வருடத்திற்கு முன்னர் நான்கு வீரர்களை தவிர்த்து அணியே இருக்காது என்ற நிலை இருந்தது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்,விவிஎஸ் லட்சுமனன் இந்த நால்வரும் இல்லாமல் இந்திய அணியின் போட்டிகள் நடைபெறாது. அந்த அளவிற்கு இந்திய அணி அவர்கள் சார்ந்திருந்தது. இந்திய அணியின் பெரும்பலம் இவர்கள் நால்வரிடமே இருந்தன. பல்வேறு அணிகளின் பந்துவீச்சாளர்களும் ஒத்துக்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நிச்சயம் இவர்களது பெயர்கள் இருக்கும்.

dravid 2

- Advertisement -

குறிப்பாக ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் இவர்களது ஆதிக்கம் இருந்தது. இந்திய அணி தோற்று விடும் என்று நினைத்த போதெல்லாம், நால்வரில் யாராவது ஒருவர் அணியை கரை சேர்த்து விடுவார்கள். இந்த நால்வரும் இணைந்து இந்திய அணிக்காக விளையாடிய காலம் பொற்காலம். அதுவும் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது அந்த டெஸ்ட் அணி பல வியக்கத்தக்க சாதனைகளை படைத்தது. ரசிகர்களுக்கும் இந்த கூட்டணி மறக்காத பல நினைவுகளை கொடுத்துள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் இதழ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நால்வரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. புகைப்படத்தை வெளியிட்டு.. ”இந்த நாள் வரை விட தலை சிறந்தவர்கள் யார்? பொருத்திருந்து பார்ப்போம்” என்று பதிவிட்டு இருந்தது,

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சௌரவ் கங்குலி பகிர்ந்தார். ”என் வாழ்வில் மிகச் சிறந்த தருணம். இவர்களுடன் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்”. என்று பதிவு செய்திருந்தார். இந்த நால்வரும் சேர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் ஒரே அணியில் இந்தியாவிற்காக ஆடினர்.

- Advertisement -

இந்த கூட்டணியில் முதலில் சவுரவ் கங்குலி ஓய்வு பெற்று தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அதன் பின்னர் தொடர்ச்சியாக லட்சுமணன், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் என அனைவரும் ஓய்வு பெற்றனர். இந்த நால்வர் கூட்டணியில் மிகச்சிறந்த திறமை என்னவென்றால் நால்வரும் அனைத்துவிதமான பந்துகளையும் எந்த ஒரு இடத்திலும் வைத்து துவம்சம் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள்.

இவர்களது காலகட்டத்தில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, சமிந்தா வாஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அவர்களை எல்லாம் எதிர்த்து ஆடி பல சாதனைகளை இவர்கள் படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement