எங்களால் எதுவும் செய்ய முடியாது. குடுக்கமுடிலனா கோச்சிக்காதீங்க இந்திய வீரர்களுக்கு தன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு மேலும் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டிகள் ஐ.பி.எல் தொடர் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Ipl cup

அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் அதுவும் வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகின. இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அடுத்து வரும் அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

மேலும் கிரிக்கெட் போட்டியை விட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளில் நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியது. இதனிடையே தற்போது ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய கிரிக்கெட் நிர்வாகங்கள் பிசிசிஐக்கு கடிதம் எழுதின.

Ganguly

எனினும் இது குறித்து பேசிய கங்குலி எங்களுடைய நிதிநிலை குறித்து நாங்கள் ஆராயவேண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வில்லை என்றால் 4,000 கோடி இழப்பு நஷ்டம் ஏற்படும். இதனை சமாளிக்க வீரர்களில் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஆனால் போட்டிகள் நடந்தால் இதுபோன்ற பிடித்தம் இருக்காது.

Ind

ஒருவேளை போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்படும் வகையில் இந்திய வீரர்களின் சம்பளத்தில் நிச்சயம் பிடித்தம் ஏற்படும் என்ற தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறிய இந்த கருத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வீரர்களின் சம்பளம் பிடித்தம் இருக்கும் என்றாறும் எது எப்படி இருந்தாலும் அதனை வீரர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பது போல கங்குலி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement