இந்திய அணியில் கூடிய சீக்கிரம் இந்த இளம்வீரர் விளையாடுவார் – வாக்குறுதி அளித்த கங்குலி

Ganguly-2

நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம்வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி தேர்வுக்குழுவினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அந்த வகையில் பெங்களூரு அணிக்காக விளையாடி இளம் தொடக்க வீரராக களம் இறங்கியவர் தேவ்தத் படிக்கல்.

Padikkal 2

நடப்பு ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரரும் இவர்தான். நடப்பு தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 450+ ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூடிய விரைவில் தேவ்தத் படிகள் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதைப்பற்றி நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பது ” படிக்கல் திறமையான வீரர். ஈடன்கார்டனில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு வங்கத்திற்கு எதிராக அவர் வேகப்பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டார். டி20 போட்டி என்பது முதல் கட்டம் தான் இன்னும் சில சீசன்களில் செல்லட்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Padikkal 3

நடப்பு ஐபிஎல் இல் விளையாண்ட வருன் சக்ரவர்த்தி நடராஜன் போன்ற பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கங்குலி வாயில் இருந்தே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதால் விரைவில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மேலும் முன்னாள் வீரர்கள் இவரை யுவராஜ் சிங் போல விளையாடுகிறார் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.அவரது உயரமும் அவரது ஆட்டமும் கிட்டத்தட்ட அவரை போன்று தான் உள்ளது. இடது கை வீரரான இவரை வெகு சீக்கிரத்தில் இந்திய அணியில் பார்க்கலாம்.