இலங்கை அணிக்கெதிரான தொடருக்காக புதிய அணி விளையாடும். கேப்டன் இவர்தான் – கங்குலி அறிவிப்பு

Ganguly

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில், வீரர்களுக்கிடையே கொரானா பரவியதால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கடுத்த சில நாட்களிலேயே ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்தியாவின் முன்னனி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் இலங்கை அணியுடன் ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதைப் பற்றி பிசிசிஐயின் தலைவராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேட்னான சௌரவ் கங்குலி நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது,

sl

ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை அறிவித்தார். ஆனால் இந்திய அணி ஜூன் மாதமே இங்கிலாந்து செல்லவிருக்கிறது. மேலும் இங்கிலாந்துக்கு இடையான டெஸ்ட் தொடரும் செப்டம்பர் மாதம் தான் முடியும் என்பதால், இலங்கைக்கு எதிரான தொடர் நடைபெறுவது சாத்தியமா என்ற கேள்வியை நிரூபர்கள் எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளித்த கங்குலி,
நிச்சயமாக இலங்கைக்கு எதிரான தொடர் நடைபெறும். அதற்காக நாங்கள் இரு அணிகளை பயன்படுத்துவதாக இருக்கிறோம்.

- Advertisement -

இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணி வீரர்கள் மறுபடியும் இந்தியா திரும்பி வந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார்கள். ஏனெனில் கொரனா தனிமைப்படுத்துதல் அதிகமான நாட்களை எடுத்துக்கொள்ளும் என்பதால், இங்கிலாந்து செல்லவிருக்கும் வீரர்களை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களை இலங்கை தொடருக்கு தயார்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும், இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்குமென்றும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, ஜூலை மாதத்தை நாங்கள் பயனுள்ளதாக மாற்ற விரும்புகிறோம்.

Iyer

அந்த மாதத்தில் இங்கிலாந்து அணியானது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கு வாய்ப்பில்லாததால் நாங்கள் இந்த முடிவெடுத்துள்ளோம் என்று கூறியிருக்கிறது.இதற்கிடையில் அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் ஜூலை மாதத்தில் திரும்பவும் இந்தியா வந்து இலங்கை தொடரில் விளையாட வேண்டிய தேவை இருக்காது என்பதால், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டே இலங்கைக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்யும் முடிவில் இருக்கிறது பிசிசிஐ.

- Advertisement -

அதன்படி தோல்பட்டை காயத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஸ்ரேயஷ் அய்யர், காயத்திலிருந்து மீண்டு வந்தால் அவர்தான், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறுது. ஒருவேளை அவருக்கு காயம் குணமாகவில்லையென்றால், ஷிகர் தவானுக்கு கேப்டன் பொறுப்பு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்துக்கு செல்லவிருக்கும் இந்திய அணியல் இடம்பெறாத, புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா, ப்ரித்வி ஷா ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடிப்பார்கள்.

Dhawan

மேலும் தீபக் சஹார் மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக பந்து வீசிய இடது கை வேகப்பந்து வீச்சளரான சேத்தன் சக்காரியாவுக்கும் இடம் கிடைக்கும். ஸ்பின் பௌலிங் யூனிட்டை அனுபவ வீரரான சாஹல் மற்றும் இளம் வீரரான ராகுல் சஹாரும் நிரப்புவார்கள் என்று தெரிகிறது. மேலும் சமீபத்தில் இந்திய அணிக்கு அறிமுகமாகிய வீரர்களான இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள். எப்படி பார்த்தாலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய முன்னனி வீரர்கள் இல்லாத இந்த இந்திய அணியும் வலுவான அணியாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement