நாளைய போட்டி ரத்து செய்யப்படாது. மாறாக இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது – விவரம் இதோ

Ind

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நாளை துவங்க உள்ளது. நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் முதல் டி20 போட்டியில் நடைபெற உள்ளதால் நேற்றும் இன்றும் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Ban

இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு உள்ளதால் அங்குள்ள மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெளியில் புகை மூட்டமாக சுவாசத்தை பாதிக்கும் காற்றும் வெளிவருவதால் பள்ளிகளுக்கு ஐந்தாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது.

காற்று மாசுபாடு காரணமாக போட்டி நடைபெற சாத்தியம் உள்ளதா என்று கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வானம் மங்கலாக உள்ளது மேலும் மைதானம் முழுவதும் மாசு நிறைந்துள்ளது. எனவே நாளைய போட்டியில் மின்னொளியில் நடக்கும் வாய்ப்பு உள்ளது அதே போன்று வீரர்களை மட்டுமின்றி முககவசம் அணிந்து விளையாட வாய்ப்பு உள்ளது.

IND 1

ஏனெனில் வங்கதேச வீரர்கள் பயிற்சியில் முகக்கவசம் அணிந்தே பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய வீரர்கள் முககவசம் அணியவில்லை. இந்நிலையில் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட தயாராக இருப்பதாகவும் கங்குலி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -