இவர் இல்லனா இந்திய அணி வெய்ட்டா இருக்காது. இவரும் ஆஸ்திரேலியா போக வாய்ப்பு இருக்கு – உறுதியளித்த கங்குலி

Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் தொடருக்கு ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். அதிலும் ஐபிஎல் தொடரில் விளையாடாத புஜாரா, ஹனுமா விஹாரி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணியின் நிர்வாக அலுவலர்கள் என அனைவரும் துபாய்க்கு சென்றிருக்கின்றனர்.

INDvsAUS

நேரடியாக இவர்கள் அனைவருடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட 31 வீரர்களும் ஆஸ்திரேலியாவிற்கு செல்வார்கள். முதலில் டி20 ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று அணிகளுக்கும் தனித்தனியாக அணி அறிவிக்கப்பட்டது. இதில் எந்த அணியிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏனெனில் அப்போது ரோகித் சர்மா காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடாமல் இருந்தார்.

- Advertisement -

தற்போது பிசிசிஐ மருத்துவ குழு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது. இந்த மருத்துவ பரிசோதனையில் நல்ல முடிவு வந்து விட்டால் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு அவர் அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. மேலும் காயம் காரணமாக வெளியே இருக்கும் ரோகித் சர்மா தற்போது கண்டிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாக சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார் அவர் கூறுகையில்…

rohith

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் தொடர் கண்டிப்பாக இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு இஷாந்த் ஷர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அதை உடல்நிலையை பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம். இஷாந்த் ஷர்மா இன்னும் முழுமையாக வெளியேற்றப்படவில்லை.

கண்டிப்பாக அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கலாம். ரோகித் சர்மா தனது உடல் தகுதியை திரும்ப பெற வேண்டும். தொடருக்கு முன்னர் தனது உடல் தகுதியை நிரூபித்து விட்டால் கண்டிப்பாக அவரை அணியில் எடுப்போம். தொடர் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட பாதியில் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement