இந்திய அணியில் இவரது ஆட்டத்தை மட்டும் நான் வெறித்தனமாக பார்ப்பேன் – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி பேட்டி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலியிடம் இந்திய அணியில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார் ? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி கூறுகையில் : இந்திய அணியில் பல வீரர்கள் உள்ளனர். பிசிசிஐயின் தலைவராக நான் இதுபோன்ற ஒரு கேள்விக்கு ஒரு நபரை மட்டும் சிறந்த வீரர் என்பதை கூறக்கூடாது என நினைக்கிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே எனக்குப் பிடித்தமானவர்கள் தான்.

Ganguly (2)

- Advertisement -

ஆனாலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அது ஆட்டத்தை மிகவும் ரசித்து பார்ப்பேன். அதேபோன்று நான் இளம் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆட்டத்தை வெறித்தனமாக பார்ப்பேன். ஏனென்றால் அவர் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் என நான் நினைக்கிறேன். அதனால் அவரது ஆட்டத்தை நான் விரும்பிப் பார்ப்பேன்.

மேலும் பவுலிங்கில் பும்ரா, ஷமி ஆகியோர் சிறந்த வீரர்கள் அதேபோன்று ஷர்துல் தாகூரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவர் மிகவும் தைரியமானவர். இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். அதனால் குறிப்பிட்ட ஒரு வீரரை பிடிக்கும் என்று கூறுவதைவிட அனைவருமே எனக்கு பிடிக்கும் எனக் கூறுவதுதான் சரி.

pant 1

ஒரு காலகட்டத்தில் சுனில் கவாஸ்கருக்கு பின் யார் வரப் போகிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அப்போதுதான் டெண்டுல்கர் டிராவிட் அனில் கும்ப்ளே போன்றோர் வந்தார்கள். அதேபோன்று டிராவிட் டெண்டுல்கர் சென்ற பின் தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட் ஆகியோர் இந்திய அணிக்காக வந்துள்ளனர்.

rohith

ஒவ்வொரு தலைமுறையிலும் சிறந்த வீரர்கள் இந்தியாவுக்கு உருவாகிக் கொண்டேதான் வருகின்றனர் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement